போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை

1. போற்றிடு ஆன்மமே, சிருஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,
ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்

2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,
யாவும் அவர் அருள் ஈவாம் – போற்றிடு

3. போற்றிடு காத்தூணஆசீர்வதிக்கும் பிரானை,
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.
பேரன்பராம் பராபரன் தயவை,
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.- போற்றிடு

4. போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,
ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவரே,
வணங்கி மகிழ்வாய் ஆமென்.- போற்றிடு



potrridu aanmame, sidshi karththavam vallorai

1. potrridu aanmame, sidshi karththavam vallorai,
eetrridu unakku iradsippu sukamanorai
kudiduvom padiduvom paranai
manbay sbaiyarellorum

2. potrridu yavaiyum njanamay aalum piranai,
aarralayk kabbare dham seddai maraivil nammai.
iinththiduvar iindu nam vendum ellam,
yavum avar arul iivam – potrridu

3. potrridu kaththunai aaseervathikkum biranai,
therriye dhayaval nirabbuvar un vanalai.
beranparam paraparan dhayavai,
sinththibbay ippotheppothum.- potrridu

4. potrridu aanmame, en muzhu ullame nayum,
eerridum karthdharai javarasikal yavum.
sabaiyare, sernththendrum solluvare,
vanangki makizhvay aamen.- potrridu